மட்டக்களப்பில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் 11 மன்றங்கள்
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
காத்தான்குடி நகர சபையில் மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை பெற்றுள்ளது.
எனினும் மட்டக்களப்பு மாவட்டத்தி லுள்ள 12 மன்றங்களில் காத்தான்குடி தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரம், ஏறாவூர் நகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபை களிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை உரு வாகியுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 17 ஆசனங்களை பெற்றுள்ள போதிலும் ஏனைய கட்சிகளில் இருந்து ஓரிரு உறுப்பினர்களின் ஆதரவு தமி ழரசுக் கட்சி ஆட்சியமைப்பதற்கு தேவைப்படுகின்றன. அதே போன்று ஏறா வூர் நகர சபையில் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பும், ஐக்கிய தேசியக் கட்சி யும் சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆட்சியை தீர்மானிப்பதற்கு தமிழ் உறுப்பி னர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது. மண்முனைப் பற்று பிரதேச சபையில் ஆட்சியமைப்பதற்கு முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகின்றது.
இவ்வாறு மட்டக்களப்பில் முஸ்லிம் பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய 9 உள்ளூ ராட்சி மன்றங்களில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை பெற்றிருந்தாலும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.