மாணவர்களிடம் பணம் அறவிடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - இராதாகிருஷ்ணன்.!
கல்வி அமைச்சின் மூலமாக பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற சுரக் ஷா காப்புறுதி திட்டத்திற்கு மாணவர்களை பதிவு செய்கின்ற பொழுது ஒரு சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் பணம் அறவிடுவதாக என க்கு பெற்றோர்களால் புகார் வழங்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பணம் அறவிடுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பணம் கேட்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் தொடர்பாக எனது அமைச்சின் கவன த்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு பணம் அறவிடுவது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு பணம் கேட்கின்ற ஆசிரியர்கள், அதிபர்கள் தொடர்பாக எனது அமைச்சின் கவன த்திற்கு கொண்டு வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சு பாடசாலை மாணவர்களின் நன்மை கருதி இலவச காப்புறுதி திட்டம் ஒன்றை தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது.இந்த காப்புறுதி திட்டமானது சுரக் ஷா என்னும் திட்டத்தின் மூலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த காப்புறுதி திட்டத்தின் மூலமாக மாணவர்களுக்கு இரண்டு இலட்சம் ரூபா வரை காப்புறுதிகளை பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்காக அனைத்து மாணவர்களும் தங்களை தங்களுடைய பாடசாலைக ளில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்காக எந்த ஒரு கட்டணத்தையும் பாடசாலையில் அதிபர்களோ ஆசிரியர்களோ அறவிட முடியாது. இலவசமாக பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்த திட்டத்தில் மாணவர்களை இணை த்துக் கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு ஏற்படுகின்ற சுகவீனம், விபத்துகள் மற்றும் ஏனைய மருத்துவம் தொடர்பான பிரச்சினைகளின் பொழுது அவர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பயன்களை பெற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம் பெற்றோர்களுக்கு ஏற்படும் பாரிய சுமையை அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
மாணவர்கள் தங்களுடைய 13 வருட கல்வியை தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த திட்டத்தினை அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இதன்மூலமாக பெற்றோர் பலன்களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டமானது முழுமையாக இலவசமாகவே வழங்கப்படுகின்றது.
இதற்காக பாடசாலைகளில் எந்த காரணம் கொண்டும் பணம் அறவிட முடி யாது. அப்படி பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டால் அது தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்து ள்ளார்.