Breaking News

அம்­பா­றையில் 98,914 பேர் வாக்­க­ளிக்­க­த் தவறியுள்ளனர்.!

அம்­பாறை மாவட்­டத்தில் நடந்தேறி முடிவுற்ற உள்­ளூராட்­சி ­மன்றத் தேர்­தலில் 98ஆயி­ரத்து 914பேர் வாக்­க­ளிக்­க­வில்­லை­யென தேர்­தல்கள் ஆணைக்­குழு விவரித்­துள்­ளது. 

மாவட்­டத்தில் வாக்­க­ளிக்­கத் ­த­கு­தி­யான 5லட்­சத்து 673வாக்­கா­ளர்­களுள் 4லட்­சத்து ஆயி­ரத்து 759 வாக்­கா­ளர்­களே வாக்­க­ளித்­துள்­ளனர். அதன்­படி 98914 பேர் வாக்­க­ளிக்­க­வில்லை. அதே­வேளை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தின் 20 சபை­க­ளுக்­கு­மான தேர்­தலில் வாக்­க­ளித்­த­வர்­களில் 4 ஆயி­ரத்து 105 வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. 

அதன்­படி அளிக்­கப்­பட்ட 401759வாக்­கு­களுள் 397654 வாக்­குகள் செல்­லு­ப­டி­யா­ன­தாக கணிக்­கப்­பட்­டுள்­ளன. ஆகக்­கூ­டு­த­லான வாக்­குகள் கல்­முனை மாந­கர சபைக்­கான தேர்­தலில் வாக்­க­ளித்த வாக்­கா­ளர்­களின் வாக்­கு­களே கூடு­த­லாக நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இங்கு 611 வாக்­குகள் இவ்­வாறு நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இம்மாவட்டத்தில் அடுத்து சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்த லில் வாக்களித்த வாக்காள ர்களின் 587 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 


மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.