“அதைப் பற்றி நாம் மட்டும்தான் பேசுகிறோம்” - ரணில்
“குறிப்பிட்ட சில கட்சிகள் ஏனையோர் மீது சேறு பூசவே அரசியல் மேடை களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், மக்களினதும் நாட்டினதும் அபிவிரு த்தியைப் பற்றிப் பேசும் ஒரேயொரு கட்சி ஐ.தே.க.வே!”
இரத்தினபுரியில் நேற்று (2) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து பேசிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
“நம்மை விமர்சிப்பவ ர்களிடம் நாட்டை அபிவிருத்திப் பாதையில் அழைத்துச் செல்வதற்குத் தேவையான திட்டம் எதுவும் இல்லை.
அதனால் தான் அவர்கள் மற்றவர்களுடைய குறைகளைத் தேடிக்கொண்டு திரிகிறார்கள்.
“தற்போதைய அரசு நாட்டின் எதிர்காலத்தை பிரகாசமானதாக ஆக்கவேண்டும், ஆக்கும்! மத்திய அரசாக இருந்தாலும் உள்ளூராட்சி அரசாக இருந்தாலும் தங்களுக்காக அரசு ஏற்படுத்தியிருக்கும் சலுகைகளையும் நன்மைகளையும் மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும்.”
என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.