குற்றச்சாட்டை நிராகரித்த சுமந்திரன்.!
பிணைமுறி அறிக்கை குறித்து சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க ஆளும் தரப்பும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து செயற்பட்டன இது திட்டமிட்ட சதியென கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தினர்.
எனினும் நான் முன்வைத்த கோரி க்கை நியாயமானது, சட்ட விதிமுறை க்கு ஏற்றதாகவே அமைந்துள்ளதாக குறிப்பிட்ட கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் வாசுதேவ நாணயக்கார வின் குற்றச்சாட்டை நிராகரித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்கு பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில். மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறி க்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கள் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவிருந்தன.
எனினும் நான் முன்வைத்த கோரி க்கை நியாயமானது, சட்ட விதிமுறை க்கு ஏற்றதாகவே அமைந்துள்ளதாக குறிப்பிட்ட கூட்டமைப்பின் எம்.பி. சுமந்திரன் வாசுதேவ நாணயக்கார வின் குற்றச்சாட்டை நிராகரித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை ஒழுங்கு பிரச்சினை எழுப்பி உரையாற்றுகையில் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறுகையில். மத்திய வங்கி பிணைமுறி ஆணைக்குழு அறி க்கை மற்றும் பாரிய நிதி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கள் நேற்றைய தினம் (நேற்று முன்தினம்) விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படவிருந்தன.
இவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நானே விவாதிக்க தயாரானேன். எனினும் பாரிய நிதி மோசடி ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ்மொழியில் இல்லாத காரணத்தினால் தம்மால் விவாதத்தில் ஈடுபட முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரன் சபையில் முரண்பட்டார்.
அவரது கோரிக்கையின் நியாயத்தை கருத்திற் கொண்டு விவாதத்தை பிற்போட முடியும் என்பதை நானும் ஏற்றுக்கொண்டேன். எனினும் அதன் பின்னர் ஆராய்ந்து பார்த்ததில் கடந்த 6 ஆம் திகதி நடத்தவிருந்த விவாதத்தின் போது மொழி பெயர்ப்பு பிரச்சினையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தவில்லை.
பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பிலான கூட்டத்திலும் இந்தப் பிரச்சினையினை முன்வைக்கவில்லை. அப்போதெல்லாம் வாய்மூடி இருந்த சுமந்திரன் ஏன் இறுதி நேரத்தில் விவாதத்தை குழப்பினார். ஏனெனில் பிணைமுறி அறி க்கை குறித்து நாம் சபையில் முன்வைக்கவிருந்த காரணிகளை தடுக்க வேண்டுமென்றே தேவை அரசாங்கத்திற்கு இருந்தது.
பிரதமரும் நெருக்கடியில் இருந்த நிலையில் இவர்கள் இரு தரப்பும் இணை ந்து முன்னெடுத்த சதியென நான் சபையில் குற்றம் சுமத்துகின்றேன் என குறிப்பிட்டார்.
மேலும் சபையில் ஒழுங்கு பிரச்சினை எழுப்பி கருத்துத் தெரிவித்த கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் கூறுகையில்,
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறும் கருத்து தவறானது. நிலையியல் கட்டளைக்கு அமையவும் இது தவறானது.
1970 ஆண்டுகளில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வாசுதேவ நாணயக்கார இந்த காரணி குறித்து தெரிந்திருக்க வேண்டும். கடந்த 6 ஆம் திகதி விவாதம் நடத்தப்படவிருந்த நிலையில் கூடிய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் தெரிவித்தேன்.
விவாதத்தை பிற்போட எமக்கு எந்த தேவையும் இல்லை. அறிக்கைகள் ஆங்கிலத்தில் இருக் கும் நிலையில் விவாதத்திற்கு முன்னர் அறிக்கை தமிழ் மொழியில் வழங்கப்பட வேண்டுமென கோரியிருந்தேன். சிங்கள அறிக்கையை வைத்து எம்மால் விவாதத்தை நடத்த முடியாது.
அவ்வாறு இருக்கையில் வாசுதேவ நாணயக்கார போன்றவர் என்னுடைய இந்த கோரிக்கைக்கு முரண்படுவது ஆச்சரியமாக உள்ளது. நான் சட்ட ரீதியில் ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணியை நான் முன்வைத்தேன் எனத் தெரிவித்தார்.
இவ்வேளை சபாநாயகர் பதிலளிக்கையில்......,
சுமந்திரன் எம்.பி. முன்வைத்த காரணிகளை நீதி சார்ந்ததாக நான் கருதுகின்றேன். பாரிய எண்ணிக்கையான ஆவணங்களை கொண்ட அறிக்கை குறி த்து விவாதம் நடத்துவது அவர்களுக்கு ஏற்ற மொழியில் இருக்க வேண்டும்.
எனினும் மொழி மாற்று நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதமே இதற்கு காரணமாகும். இதில் ஒருவருக்கு ஒருவர் குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை. ஜனாதிபதி செயலகத்தில் இந்த அறிக்கையின் மொழிமாற்று பிரதிகளை முன்வைக்க வேண்டுமென நான் கேட்டுள்ளேன்.
விரைவில் அறிக்கை தருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எவ்வாறு இரு ப்பினும் சபையின் பூரண இணக்கப்பாட்டுடன் விவாதத்தை ஒத்திவைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது. எனினும் விவாதத்தை ஒத்திவைக்க ஆளும் கட்சி யின் சார்பில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பது நான் பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் எனத் தெரிவித்தார்.