Breaking News

''பிரிகேடியர் மீதான விசாரணையின் பின் நடவடிக்கை எடுக்கப்படும்''

லண்­டனில் ஈழத்­த­மி­ழர்கள் ஆர்ப்­பாட்டம் மேற்­கொண்­ட­போது அவர்­களை அச்­சு­றுத்தும் வகையில் சைகை காண்­பித்த பிரி­கே­டியர் பிரி­யங்க பெர்­னா ண்டோ மீது வெளி வி­வ­கார அமைச்சும் இராணுவமும் விசா­ர­ணை­களை நட த்தி வருகின்றன. விசாரணையையடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.


பிரிகேடியர் பிரியங்க விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை என்ன என கேள்வியெ ழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு பதில ளித்தார். கடந்த நான்காம் திகதி இலங்­கையின் சுதந்­திர தினத்­தன்று லண்­டனில் உள்ள இலங்கை தூத­ர­க த்­திற்கு முன்னாள் புலம்­பெ­யர்ந்த ஈழ த்­த­மி­ழர்கள் ஆர்ப்­பாட்டம் நடத்­தி­யி­ருந்­தனர். இவ் ஆர்ப்­பாட்­டத்­தின்­போது தூத­ர­கத்தின் பாது­காப்பு ஆலோ­ச­க­ரான பிரி­கே­டியர் பிரி­யங்க­பெர்­னாண்டோ கழுத்தை அறுப்பேன் என்று சைகை மூலம் எச்­ச­ரிக்கை காண்­பிக்கும் ஒளிப்­ப­தி­வுகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளியா­கி­யி­ருந்­தன. இத­னை­ய­டுத்து இவரை பத­வி­யி­லி­ருந்து நீக்­கு­மாறு வெளிவி­வ­கார அமைச்சு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. 
இவ் உத்­த­ரவை ஜனா­தி­பதி தடுத்து நிறுத்­தி­ய­துடன் பிரி­கே­டி­யரை தொடர்ந்தும் பத­வியில் அமர்த்து­மாறு உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார். இந்த நிலை­யில்தான் வெளிவி­வ­கார அமைச்சும் இராணுவமும் விசாரணைகளை தொடர்வதாகவும் விசாரணையின் பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார்.