சிவராம் படுகொலையில் பிரதான பங்குதாரி - கருணா ! (காணொளி)
முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரனே சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி சிவராம் படுகொலைக்கு பிரதான வகிப்பா கங்களை மேற்கொண்டவர் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்து ள்ளார்.
30 வருட ஆயுதப்போராட்டம் மௌனி க்கப்பட்டதிலிருந்து தற்போது வரை தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்தி ரமே எனத் தெரிவித்துள்ளனர். உள்ளு ராட்சிமன்ற தேர்தல் நாளை மறு தினம் சனிக்கிழமை 10ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், மட்டக்க ளப்பு – களுதாவளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி பிரசாரக் கூட்டம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,
தமிழ் மக்கள் தங்களுடைய சொத்துக்கள், கலை, கலாசாரம் என அனைத்தையும் இழந்த மைக்கு நாட்டின் பிராதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசிய கட்சியே காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.