தமிழ் ஊடகங்கள் இரண்டை மஹிந்த வாங்கி விட்டார் - சுமந்திரன்!
இரண்டு தமிழ் ஊடகங்களை மகிந்த ராஜபக்ச வாங்கி விட்டார். இன்று தான் எனக்கு இந்தத் தகவல் கிடைத்து என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்து ள்ளார்.
கரவெட்டியில் வேட்பாளர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
முக்கியமான இரண்டு தமிழ் ஊடகங்களை மகிந்த ராஜபக்ச வாங்கியுள்ளதாக இன்று காலை தான் இத் தகவல் எனக்குக் கிடைத்தது.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் வந்தபோது கறுப்புக் கொடி காட்டியவர்கள், கறுப்புப்பட்டி அணிந்து போராட்டம் நடத்தியவர்கள், முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்தபோது எந்த எதி ர்ப்பும் தெரிவிக்கவில்லை. மகிந்தவுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்துள்ளார்கள் –- எனத் தெரிவித்துள்ளார்.