Breaking News

யாழில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது கணவன் கத்திக் குத்து. !

பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், தனது கணவனின் கத்தி வெட்டுக்கு இலக்காகிய சம்பவம் ஒன்று, யாழ்ப்பாணம், மீசாலை – புத்தூர் சந்தி, ஏ – 9 வீதியில் இச் சம்பவம் நடைபெற்றது. 

பருத்தித்துறை பொலிஸ் நிலைய த்தில் கடமையாற்றும் முகுந்தன் சர்ஜினி (வயது 26) என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கத்தி வெட்டுக்கு இலக்காகியதாக, கொடி காமம் பொலிஸார் தெரிவித்துள்ள னர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் உத்தியோகத்தர், கையில் வெட்டுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.  கடமைக்குச் சென்று திரும்பும் வழியில், தனது கணவனே தன்னை வெட்டி யதாக, குறித்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர், கொடிகாமம் பொலிஸ் நிலை யத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார். 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, கொடிகாமம் பொலி ஸார் முன்னெடுத்துள்ளனர்.