Breaking News

தேர்­தல்கள் ஆணை­க்குழு தலைவர் வேண்­டுகோள்.!

விகி­தா­சார முறையின் கீழ் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­காக பெய­ரி­டப்­பட்­டுள்ள பிர­தி­நி­தி­களின் பெயர் பட்­டி­யலை எதிர்­வரும் மார்ச் 2 ஆம் திகதி அல்­லது அதற்கு முன்னர் பெற்­றுத்­தர வேண்டும் என அர­சியல் கட்­சி­க­ளிடம் தேர்­தல்கள் ஆணைக்­குழுத் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

இரா­ஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள தேர்­தல்கள் செய­லத்தில் நேற்று மாலை இடம்­பெற்ற ஊடக சந்­திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரி­விக்கும் போதே  தெரி­வித்­துள்ளார்.

 மேலும் தெரிவிக்கையில். 

 நடை­பெற்று முடிந்­துள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலின் பின்னர் பெண் பிர­தி­நி­தித்­துவம் குறித்து பல்­வேறு கருத்­துக்கள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் பெண் பிர­தி­நி­தித்­துவம் குறித்து சர்ச்­சைகள் எழுந்­துள்­ளன. சட்ட திருத்­தங்கள் குறித்து குழப்­ப­க­ர­மான செய்­திகள் வெளி­வ­ரு­கின்­றன. 

எனினும் தேர்தல் பிர­தி ­நி­தித்­து­வத்தின் தீர்­வுகள் குறித்தே நாம் செயற்­பட்டு வரு­கின்றோம். அந்த வகையில் அனைத்து சபை­க­ளிலும் 25 வீத பெண் பிர­தி­நி­தித்­துவம் கிடைக்­க­வில்லை. பெண் பிர­தி­நி­தித்­துவம் இல்­லாத கார­ணத்­தினால் சபை­களை அமைக்­காமல் இருக்­கவும் முடி­யாது. 

ஆகவே சில வட்­டா­ரங்­களில் குறித்த ஒரு கட்சி சகல ஆசனங்களையும் வெற்றி பெற்­றுள்ள நிலையில் அந்த கட்­சியின் மூலம் 10 வீத­மான பெண் பிர­தி­நி­தித்­து­வமே உள்­ள­டக்­கப்­படும். இது சிறு கட்­சிகள் குறைந்த ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்ட கட்­சிகள் குழுக்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். 

மேலும் மட்­டக்­க­ளப்பு - மண்­மு­னைப்­பற்று பிர­தேச சபை விசித்­தி­ர­மான பிர­தேச சபை, அந்த பிர­தேச சபையில் பெண் பிர­தி­நிதி ஒரு­வ­ரா­யினும் இல்லை. ஆகவே இவற்­றினை எல்லாம் கருத்திற் கொண்டு நாம் செயற்­பட வேண்டும்.

மேலும் விகி­தா­சார முறையின் கீழ் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­காக பெய­ரி­டப்­பட்­டுள்ள பிர­தி­நி­தி­களின் பெயர் பட்டியலை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் பெற்றுத்தர வேண்டும். இவற்றினை அரசியல் கவனத்தில் எடுத்துச்  செயற்படுமாறு தெரிவித்துள்ளார்.