காணாமல் போனோர் பணியக சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமென – பிரதமர்
காணாமல் போனோர் பணியக சட்ட த்தை அரசாங்கம் விரைவில் நடை முறைப்படுத்தும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வவுனியாவில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐதேக வின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரி வித்துள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் போனோர் பணியக சட்டத்துக்கு அரசாங்கம் ஏற்கனவே நாடாளு மன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. இப்போது நடைமுறைப்படு த்துவதற்கு தயார் நிலையில் அந்தச் சட்டம் உள்ளதென தெரிவித்தார்.
வடக்கில் உள்ள மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதை அரசாங்கம் நன்கு அறிந்து வைத்திருப்பதுடன் வடக்கில் உள்ள, கணவனை இழந்த பெண்களுக்கு, தேவையான உதவிகளை வழங்கி அவர்களை வலுப்ப டுத்தவும் அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கையில்..
மேலும் வடக்கில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் தேவை என்ப தையும் அரசாங்கம் அறியும். இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கான திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, காணாமல் போனோர் பணியக சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்ப ட்டு, பல மாதங்களாகியும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இன்னமும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.
காணாமல் போனோர் பணியகத்தின் ஆணையாளர் பதவிகளுக்குப் பொரு த்தமான 7 பேரின் பெயர்கள் அரசியலமைப்புச் சபையினால் ஜனாதிபதியிடம் பரிந்துரைக்கப்பட்டு பல வாரங்களாகியும், அவர்களுக்கான நியமனங்களை வழங்காமல், அரசாங்கம் இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றது.