Breaking News

வாக்­கெ­டுப்பு நிலை­யத்­திற்கு யார் வரலாம் ? தடையான செயற்­பா­டுகள் என்ன?

எதிர்­வரும் சனிக்­கி­ழமை உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு நடை­பெ­று­கின்ற போது கைய­டக்கத் தொலை­பே­சி­களைப் பயன்­ப­டுத்­துதல் மற்றும் புகைப்­ப­டங்­களை எடுத்தல் என்­பன முற்­றாக தடை­செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுயா­தீன தேர்தல் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்­பி­ரிய தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் வீடியோ காட்­சி­களை எடு த்தல், துப்­பாக்­கி­களை வைத்­தி­ருத்த ல், மற்றும் புகை­பி­டித்தல் மற்றும் மது­பானப் பாவனை என்­ப­னவும் வாக்­க­ளிப்பு நிலைய வளா­கத்­திற்குள் முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் மஹிந்த தேசப்­பி­ரிய அறி­வித்­தி­ருக்­கின்றார். 

 இது தொடர்பில் சுயா­தீன தேர்தல் ஆணைக்­கு­ழுவின் சார்­பாக மஹிந்த தேசப்­பி­ரிய விடுத்துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, எதிர்­வரும் 10 ஆம்­தி­கதி உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் வாக்­க­ளிப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இங்கு பின்­வ­ரு­கின்­ற­வர்­களே சமுக­ம­ளிக்க முடியும். 

குறித்த வாக்­கெ­டுப்பு நிலை­யத்தின் வாக்­கா­ளர்கள், வாக்­கெ­டுப்பு நிலைய உத்­தி­யோ­கத்­தர்கள், வேட்­பா­ளர்கள், (தமது வட்­டா­ரத்தின் வாக்­கெ­டுப்பு நிலை­யத்­திற்கு மட்டும்) வாக்­கெ­டுப்பு நிலைய முக­வர்கள், கண்­கா­ணிப்­பா­ளர்கள், கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்ள பொலிஸ் அதி­கா­ரிகள், தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்கள், தெரி­வத்­தாட்சி அலு­வ­லர்­களின் அனு­ம­தியைப் பெற்­றுள்ள நபர்கள் ஆகியோர் மட்­டுமே வாக்­க­ளிப்பு நிலைய வளா­கத்­திற்குள் செல்ல முடியும்.

எந்­த­வொரு வேட்­பா­ளரும், வாக்­கெ­டுப்பு நிலை­யத்­திற்குள் அல்­லது வாக்­க­ளிப்பு நிலைய சுற்று சூழலில் தரித்­தி­ருந்து கட்சி மற்றும் வேட்­பாளர் ஊக்­கு­விப்பு செயற்­பா­டு­களில் ஈடு­பட முடி­யாது. இதே­வேளை பின்­வரும் செயற்­பா­டு­களும் வாக்­க­ளிப்பு நிலை­யங்­களில் முற்­றாக தடை செய்­யப்­பட்­டுள்­ளன.

கைய­டக்க தொலைபேசிகளை பயன்படுத்தல், புகைப்படங்களை எடுத்தல், வீடி யோக் காட்சிகளை எடுத்தல், சுடு கலன்களை வைத்திருத்தல் மற்றும் புகை பிடித்தல், மதுபானம், போதைப் பொருள் பாவனை ஆகியனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.