Breaking News

காணாமல் போனோரை தேடிப்பார்த்தேன் எங்குமில்லை என்கிறார் ஜனாதிபதி!!

காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கை விரித்து விட்டார். 

யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரை யாற்றுகையிலே இவ்வாறு தெரிவி த்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், “வடக்கைச் சேர்ந்த பலர், காணாமல் போனோர் பற்றி கூறி வருகின்றனர். காணாமல் போனவர்களின் உறவின ர்கள் என்னைச் சந்தித்துக் கலந்துரை யாடியுள்ளனர்.

இதன்போது, அவர்கள் காணாமல் போயுள்ள தமது உறவுகள் இரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் காடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக என்னிடம் கூறினர். அதற்கமைய நானும் தேடிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எங்கும் இல்லையெனத் தெரிவித்துள்ளார். 

எனவே, காணாமல் போயுள்ளவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனை அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம். போரில் வடக்கில் காணாமல் போனது போன்று தெற்கிலும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் பலர் காணாமல் போயிருக்கின்றனர். 

எனவே அரசாங்கம் என்ற வகையில் என்னால் செய்யக் கூடிய அனைத்தை யும் நியாயமான முறையில் செய்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.