சிவசக்தி ஆனந்தனிடம் நட்டஈடு கோரும் கூட்டமைப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடமிருந்து, தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு நூறு கோடி ரூபா நட்டஈடு கோரியுள்ளது.

குறித்த கடிதத்தின் பிரகாரம் கூட்டமைப்பினால் கோரப்பட்ட தொகையை, சிவசக்தி ஆனந்தன், 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென தெரிவிக்கப்ப ட்டுள்ளது. குறித்த நட்டஈட்டுத் தொகையை குறித்த கெடு காலத்திற்குள் செலு த்த மறுக்கும் பட்சத்தில் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளித்தமைக்காக, தன்னைத் தவிர கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 2 கோடி ரூபாய் அரசாங்கத்தால் வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.