பெண் வேட்பாளர் அச்சுறுத்தல் பொலிசார் முறைப்பாட்டிற்கு மறுப்பு.!
வவுனியா கற்குளியை சேர்ந்த தமிழழசுக்கட்சியின் பெண் வேட்பாளரை ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவர் அச்சுறுத்திய சம்பவம் இன்று (10) இடம்பெற்றுள்ளது.
இச்சம்வம் குறித்து கருத்து தெரி வித்த குறித்த பெண் வேட்பாளர் தனது உறவினர்களை அழைத்து க்கொண்டு வாக்களிக்க சென்ற வேளை தனது வீட்டிற்கு அருகாமை யில் வைத்து ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவர் ''வீட்டிலே போய் இரடி இல்லாட்டி உன்ர பிள்ளைக ளுக்கு அம்மா இருக்காது'' என அச்சுறுத்தல் விடுத்ததுடன் தகாத வார்த்தை களை பிரயோகித்ததாகவும் தெரிவித்தார். ஏற்கனவே மாற்றுக் கட்சியினரால் எனக்கு அச்சுறுத்தல் சம்பவம் நடந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டிற்காச் சென்ற நிலையில் எனது முறைப்பாட்டை பொலிசார் ஏற்றுக்கொள்ளவில்லையெனத் தெரிவித்துள்ளார்.