சரவணபவன் எம்.பி. யின் சிறப்புரிமையில் பதிலளிக்க முனைந்த சிவசக்தி ஆனந்தனை எச்சரித்த சபாநாயகர்!
பாராளுமன்றத்தில் நேற்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறு ப்பினர் சரவணபவன் சுமத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தெளிவுபடுத்த முனைந்த சிவசக்தி ஆனந்தன் எம்.பி.க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய மூன்று தடவைகள் பாரிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிற்பகல் 1 மணிக்கு சபாநாயகர் கரு ஜய சூரிய தலைமையில் ஆரம்பமா னது. இதன்போது வாய்மூல விடை க்கான வினா நேரம் முடிவடைந்த பின்னர் சரவணபவன் எம்.பி. யின் சிற ப்புரிமை பிரச்சினைக்கு பதிலளிக்க சிவசக்தி ஆனந்தன் முனைந்த போதே இந்நிலைமை ஏற்பட்டது. இவ்வேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் கூறும் போது,
தமிழ்த் தேசிய கூட்ட மைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவு வழ ங்க அபிவிருத்தி என்ற பெயரில் 2 கோடி ரூபா இலஞ்சம் பெற்றதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எம்மீது குற்றம் சும த்தினார்.
இதனால் எமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளது. ஆகவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வலியு றுத்தினார்.
இதனையடுத்து சரவணபவன் எம்.பி.யின் சிறப்புரிமை பிரச்சினை க்கு சிவசக்தி ஆனந்த எம்.பி பதிலளிக்க முனைந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும் சரவணபவனும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.
எனினும் சிவசக்தி ஆனந்தன் எம்.பி தனது உரையை தொடர்ந்து நிகழ்த்தி வந்தார். இதன்போது சபாநாயகர் கரு ஜயசூரிய நீங்கள் பேச்சை நிறுத்திக்கொண்டு அமருங்கள் என பலமுறை கூறிய போதும் அதனை பொருட்படுத்தாமல் சிவசக்தி ஆனந்த எம்.பி தனது உரையை நிகழ்ச்சி வந்தார்.
இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய கடுமையாக கோபமடைந்து நீங்கள் அமர போகின்றீரா? இல்லையா?. அமருங்கள். மூன்றாவது தடவையாக கூறு கின்றேன் அமராவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்றார்.
இதன்பின்னர் சிவசக்தி ஆனந்த எம்.பி தனது பதிலை இடைநடுவே நிறுத்தி விட்டு அமர்ந்தார்.
இதனையடுத்து எழுந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் எம்.பி. யின் உரையை ஹன்சாட் அறிக்கையில் இருந்து நீக்க வேண்டுமென வேண்டு கோள் விடுத்தார்.