ஜெ மரணம்.. விசாரணைக் கமிஷனில் சசிகலா தரப்பு புதிய மனு.!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவ ர்கள் மரணத்தில் மர்மம் உள்ளதாக பல அரசியல் தலைவர்கள் தெரிவித்த நிலை யில், ஜெ மரணம் குறித்து விசாரிக்க ஒரு நபர் விசாரணைக்கமிஷன் அமை க்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரு கிறது. சசிகலாவின் உறவினர்கள் முதல் ஜெ சிகிச்சை பெற்ற மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்ட அனைவரும் விசா ரணையில் உள்ளனர். விசாரணையானது தொடர்ந்து வந்த நிலையில், சசி கலா தரப்பு விசாரணைக் கமிஷனில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தது. அதில், விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கமளித்தவர்கள் அனை வரையும் குறுக்கு விசாரணை செய்ய வேண்டுமென்ற நிலையில், முதலில் சசிகலா தரப்புக்கு அனுமதி மறுத்த விசாரணை கமிஷன் பின்னர் சசிகலா தர ப்பினரின் கோரிக்கையை ஒப்புக்கொண்டது.
இந்நிலையில், சசிகலா தரப்பினரால் விசாரணைக் கமிஷனில் மற்றுமோர் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளித்த 22 பேரில் சாட்சியங்களுடன், அவர்கள் அளி த்த ஆவணங்களையும் அளிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டு ள்ளது. விசாரணைக் கமிஷன் என்ன பதில் அளிக்குமென சசிகலா தரப்பு எதி ர்பார்த்த வண்ணமுள்ளது.