
பாராளுமன்ற நிலையியற் கட்டளைக ளின் 14ஆம் இலக்க நிலையியற் கட்ட ளைகளின் பிரகாரம் நாளை (06.02.2018) காலை 10.30 மணிக்கு பாராளுமன்ற த்தில் விசேட கலந்துரையாடலி ற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி கலந்துரையாடல் தொட ர்பாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வின் வேண்டு கோளுக்கிணங்க, சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் சமூகமளிக்குமாறு சபாநாயகர் கருஜய சூரிய அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பாக இன்று நடைபெற்ற கட்சித்தலை வர்களின் கூட்டத்தில், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவா தமும், நாளை நடைபெறவுள்ளது. இதற்கமைவாக நாளை காலை 10.30இல் இருந்து மாலை 4.00 மணிவரைக்கும் இவ் விவாதம் நடைபெறுமெனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று எதிர்வரும் 20ஆம் திகதியிலிருந்து இரண்டு நாட்களுக்கு (20,21) இவ் விவாதத்தை முன்னெடுப்பதற்கு கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் உட ன்பாடு காணப்பட்டுள்ளதாக, பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்து ள்ளார்.