தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலடி சீமான்!
மொழியை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒரு ங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
2018-19 ஆம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லீ நேற்று நாடாளுமன்ற த்தில் தாக்கல் செய்தார். மத்திய அர சின் நிதி நிலை அறிக்கையினை எளிய மக்களுக்கு புரியாதவாறு இந்தி யில் மத்திய நிதி அமைச்சர் வாசி த்தார்.
இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. அதேசமயம் இத்தகைய நிதி அறிக்கை தமிழகத்தை புறக்கணிப்பதாகவும் அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்த தமிழக பாஜக தலைவர் தமி ழிசை சௌந்தரராஜன், தமிழகம் புறக்கணிக்கப்படவில்லை.
தமிழகத்தில் நல்லது செய்வதற்கான இன்னும் பல திட்டங்களை கொண்டு வருவதற்கான அத்தனை முயற்சிகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது என மேலும் பேசுகையில், இந்தியில் நிதி அறிக்கை வாசித்ததை அரசியலா க்காதீர்கள்.
நீங்கள் மொழியை வைத்து அரசியல் செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள் இந்நிலையில் இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான், மொழியை வைத்து அரசியல் செய்ய முடியாது என்றால் மதத்தை வைத்து அரசியல் செய்யலாமா என தமிழிசையின் கருத்துக்கு சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.