Breaking News

மலேசியா பூப்பந்து போட்டியில் பிவி சிந்து மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி!

மலேசியா பூப்பந்து போட்டியில் பிவி சிந்து மற்றும் சிக்கி ரெட்டி ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இந்தியா பூப்பந்து போட்டியை தொடர்ந்து மலேசியாவில் ஆசியா பூப்பந்து போட்டிகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

இப் போட்டியில் இந்தியாவின் நட்ச த்திர வீராங்கனை சாய்னா காயம் கார ணமாக விலகியுள்ளார். மேலும் நேற்றைய தினம் பெண்கள் இரட்டை யர் பிரிவுக்கான போட்டிகள் இடம்பெ ற்றுள்ளன. 

நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து மற்றும் சிக்கி ரெட்டி ஜோடியும் என்ஜி ட்ஸ் ஜா மற்றும் யுவன் சிங் யிங் ஜோடி யும் மோதியுள்ளனர். 

இரு ஜோடிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் முதல் சுற்றில் 21 ற்கு 15 என்ற கணக்கில் சிந்து மற்றும் ரெட்டி ஜோடியும், 2 ஆவது சுற்றில் 21 ற்கு 15 என்ற கணக்கில் என்ஜி மற்றும் யுவன் ஜோடியும், 3 ஆவது சுற்றில் 21 ற்கு 14 என்ற கணக்கில் சிந்து மற்றும் ரெட்டி ஜோடியும் வெற்றி பெற்று, சிந்து மற்றும் ரெட்டி ஜோடி தொடரை கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.