இந்தியாவின் வெற்றி பயணத்தின் 4 ஆவது போட்டி நாளை!
இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதும் 4 ஆவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.
இந்தியா அணி தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளை யாடி வருகின்றது.
இந்நிலையில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்தியா அணி 2 ற்கு 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணியிடம் தோல்வியடைந்துள்ளது.
இதனை தொட ர்ந்து கடந்த 1 ஆம் திகதி 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகி யுள்ளது. இதனடிப்படையில் கடந்த 1 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரை நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில், இந்தியா அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில் நாளை 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணி ஜோகன்னஸ்பார்க் மைதானத்தில் நடைபெறவுள்ளது. மேலும் நாளை நடைபெறவுள்ள போட்டியில் தென்னாபிரிக்கா அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் டி வில்லியர்ஸ் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.