Breaking News

அர்ஜுன் அலோசியஸுக்கு பிணை கிடைக்குமா? 16ஆம் திகதி தீர்வு.! (காணொளி)

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்க ப்பட்டுள்ள பேர்ப்பச்சுவல் டிரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசி யஸ் உட்பட இருவரது பிணை கோரிக்கை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 16ஆம் திகதி தெரிவிக்கப்படவுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதி மன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை பிணை மனு முன்வைக்கப்பட்ட நிலையில் நீதவான் லங்கா ஜயரத்ன, பிணை மனு மீதான உத்தரவுக்கான திகதியை அறிவித்தார். மத்திய வங்கி யின் பிணைமுறி விற்பனையில் 11, 145 மில்லியன் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகே ந்திரனின் மருமகனான அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பேர்ப்பச்சுவல் டிரச ரீஸ் நிறுவன நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோர் கடந்த 4ஆம் திகதி கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் கொழும்பு கோட்டை நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய கடும் பாதுகாப்புக்கு மத்தியில் எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சந்தேக நபர்கள் சார்பாக பிணைமனு கோரிய எழுத்துமூல விண்ணப்பம் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் மன்றில் பிரசன்னமாகியிருந்த சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் ஹரிப்பிரியா ஜயசுந்தர, அரச சிரேஷ்ட சட்டத்தரணி லக்மினி கிரிஹாகம உள்ளிட்ட குழுவினர் இந்த பிணைமனுவுக்கு கடும் எதி ர்ப்பை வெளியிட்டனர்.

குறித்த பிணைமனு கோரிக்கையை தள்ளுபடி செய்யுமாறும் அவர்கள் எழுத்து மூலம் மன்றில் ஆட்சேபனை முன்வைத்துள்ளனர். இதனை கவனத்திற் கொ ண்ட நீதவான் லங்கா ஜயரத்ன, எதிர்வரும் 16ஆம் திகதி பிணைமனு மீதான தீர்மானத்தை அறிவிப்பதாக உத்தரவிட்டார்.