மக்களின் பிரச்சனைகளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிந்திப்பதில்லை - சம்பந்தன்
ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் கைகோ ர்த்துக்கொண்டு தமது சுயலாபங்களு க்காக அரசியல் ஈடுபட்டுவரும் சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து சிந்திப்பதில்லை யென குற்றம் சுமத்தியுள்ள எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இவ ர்களே தமிழ் – முஸ்லிம் மக்கள் மத்தி யில் தொடர்ச்சியாக பிணக்குகளை ஏற்படுத்தி வருவதாக விவரித்துள்ளார். மேலும் வடக்கு கிழக்கில் பூர்வீகமாக வாழும் தமிழ் பேசும் மக்களான தமிழ் – முஸ்லிம் மக்களின் எதிர்காலம் அவர்களின் ஒற்றுமையிலேயே தங்கியிரு ப்பதாக வலியுறுத்தும் சம்பந்தன் இதனால் இரண்டு சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருகோணமலை கிண்ணியா பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நட த்திய தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து உரையாற்றுகையிலேயே இரா. சம்பந்தன் இவ்வாறு விவரித்துள்ளார்.