அரசியல் தலைவர்களே நேர் எதிரெ என்னுடன் கலந்துரையாட வாருங்கள் - ஜனாதிபதி.!

நேற்று பிற்பகல் பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் வெற்றிபெறச் செய்ய வேண்டியது திருடர்களை பாது காக்கும் கட்சியையா அல்லது திருடர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க க்கூடிய கட்சியையா என்பதை இந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்த ஜனாதிபதி,
இம்முறை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வெற்றிபெறச் செய்யுமாறு கேட்பதற்கான காரணம் தம்மை தனிப்பட்ட ரீதியில் பலப்படுத்திக்கொள்ள வல்ல என்றும் ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான தனது கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பலப்படுத்துவதற்காகவே ஆகு மெனத் தெரிவித்தார்.
இதனால் தூய்மையான ஆட்சியை நாட்டில் கட்டியெழுப்புவதற்காக முன்னெ டுக்கப்படும் செயற்பாடுகளை மிக வினைத்திறனான முறையில் செய்து முடி க்க முடியுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் திம்புலாகல பிரதேச சபைக்கு போட்டியிடும் அபேட்சர்களின் வெற்றி யை உறுதிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மக்கள் சந்திப்பு நேற்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் அரல கங்வில பிரதேசத்தில் நடைபெற்றது.
வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த மாரசிங்க உள்ளிட்ட குழுவினர் இந்த மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.