Breaking News

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் போராட்டம்.!

கிளிநொச்சி மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் இன்று (02) கிளிநொ ச்சியில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இன்று (02) காலை ஏ9 பிரதான வீதி யில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பித்து கரைச்சி பிர தேச சபை வரை நூற்றுக்கும் மேற்ப ட்ட முச்சக்கர வண்டிகள் ஊர்வலமாக பயணித்து கரைச்சி பிரதேச சபையின் செயலாளருக்க எதிராக தங்களின் கவ னயீர்ப்பு போராட்டத்தை மேற்கொ ண்டிருந்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கரைச்சி பிரதேச சபை செயலாளரே எமக்கான அடிப்படை உரிமைகளில் ஆதிக்கம் செலு த்தாதே, நில வாடகை அடிப்படை பிரச்சினை சீர்செய்யப்படவில்லை, வருடா ந்த வாடகை 3600 ரூபாவை 1200 ரூபாவாக குறைக்கவும், முச்சக்கர வண்டி உரி மையாளர்களை தரக்குறைவாக கருதாதே, உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருத்தினர்.

அத்தோடு கிளிநொச்சியில் உள்ள தரிப்பிடங்களுக்கு மேலதிகமாக முச்சக்கர வண்டிகள் இருப்பதனால் நாளாந்தம் வருமானம் 400 ரூபா முதல் ஆயிரம் ரூபா வரையே கிடைக்கப்பெறுகிறது. இதனால் பல முச்சக்கர வண்டி உரிமை யாளர்கள் தங்களின் தொழிலை கைவிட்டு கூலி வேலைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். 

எனவே எமது இவ்வாறான நிலைமைகளை கருத்தில் கொண்டு கரைச்சி பிர தேச சபையின் செயலாளர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர் எங்களுக்கு எதிரான வகையில் செயற்பாடுகளை முன்னெ டுத்து வருவதாக முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதனை தொடர்பு கொண்டு வினவிய போது தான் கொழும்பில் ஒரு கூட்டத்தில் இரு ப்பதாகவும் தாமத்தித்து பதிலளிப்பதாகவும் தெரிவித்தார். இவர்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜரை வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு ஆளுநர், கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், கிளிநொச்சி உள்ளுராட்சி உதவி ஆணையாளர் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோருக்கும் அனு ப்பி வைக்கப்பட்டுள்ளது.