இறுதிப் போரில் சரணடைந்தவர்களின் வழக்கு விசாரணை இழுத்தடிப்பு!
இறுதிப் போரில் சரணடைந்தவர்களின் வழக்கு விசாரணை, எதிர்வரும் பங்குனி மாதம் 19 ஆம் திகதிக்கு இழுத்தடிக்கப்பட்டுள்ளது.
இறுதிப் போரின்போது படையினரி டம் சரணடைந்து காணாமல் ஆக்கப்ப ட்ட எழிலன் உள்ளிட்ட 11 பேரின் வழ க்குகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிம ன்றில் நடைபெற்றுள்ளது.
இவ் வழக்கின் விசாரணைகளில் 5 பேரின் உடைய வழக்கின் அறிக்கை கள் வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பிவைக்கப்படவுள்ள நிலையில் ஏனைய ஆறு பேருடைய வழக்குகளும் இன்றைய நாள் (04.01.18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமையை அடு த்தே, இந்த வழக்குகளை எதிர்வரும் மார்ச் மாதம் 19 திகதிக்கு ஒத்தி வைக்க ப்பட்டுள்ளதாக, இவர்கள் சார்பாக ஆயரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2009ம் ஆண்டு மஹிந்தா ராஜபக்சே ஜனாதிபதியாக இருந்த போது, இந்த உள்நாட்டுப் போர் உச்சமடைந்து முடிவுக்கு வந்தது.
போர் காலகட்டத்தின் போது ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களும் பெண்க ளும் காணாமல் ஆக்கப்பட்டார்கள். அதேபோன்று இறுதி கட்டப்போரின் போது இலட்சக்கணக்கான தமிழர்களும், விடுதலைப் புலிகள் அமைப்பினரும் இரா ணுவத்தினரிடம் சரணடைந்துள்ளனர்.