Breaking News

யார் தலைவர் ? கடும் போட்டி ! இன்று தெரிவிப்பு !

இலங்­கையின் ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­படப் போவது முன்னாள் தலைவர் அஞ்­சலோ மெத்­தி­யூஸா அல்­லது டெஸ்ட் அணித் தலைவர் தினேஷ் சந்­தி­மாலா என்­பது இன்று தெரிவிக்­கப்­ப­ட­வுள்­ளது.


இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்­சி­யா­ள­ராக சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க பொறுப்­பேற்ற பின்னர் இலங்கைக் கிரிக்கெட் அணிக்குள் அதி­ரடி மாற்­றங்கள் அரங்­கேறி வரு­கின்­றன. 

மிக முக்­கி­ய­மான மாற்­றம்தான் தலைமை மாற்றம். ஆனால் இது­வொன்றும் புதி­தல்ல. இது­வ­ரையில் ஒரு வருட காலத்­திற்குள் 4 தலை­வர்­களை பார்த்­து ­விட்­டது இலங்கை அணி. 

தற்­போது மாற்­றப்­படும் தலை­வரும் நீண்ட நாட்கள் நிலைத்து நிற்­பாரா அல்­லது பங்­க­ளாதேஷ் தொட­ருக்குப் பின் வீடு செல்­வாரா என்­பதை தலைமைப் பயிற்­சி­யாளர் சந்­திக்க ஹத்­து­ரு­சிங்க, தேர்­வுக்­குழுத் தலைவர் கிரஹம் லெப்ரோய் மற்றும் இலங்கைக் கிரிக்கெட் நிறு­வனத் தலைவர் திலங்க சும­தி­பா­ல­ ஆகியோர்தான் உறுதிப்படுத்­த ­வேண்டும். 

எமக்கு கிடைக்கப் பெற்ற தக­வல்­களின் படி ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 அணி­களின் தலைமைப் பொறுப்பு மீண்டும் அஞ்சலோ மெத்தியூஸுக்கே வழ ங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.