வெள்ளைவான் கடத்தல் தொடர்பான ஐவருக்கு 6 மாதங்களின் பின் பிணையில் விடுதலை!
தமிழ் இளைஞர்களை வெள்ளை வானில் கடத்தி காணாமல் போன விவகார வழக்கில் கடந்த 6 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீல ங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸ நாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவர் பிணை யில் விடுதலையாகியுள்ளனர்.
கடந்த 6 மாதங்களாக பிணை கோரி க்கையை நிராகரித்து வந்த கொழும்பு மேல் நீதிமன்றம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை, சந்தேக நபர்களு க்கான பிணை அனுமதியை வழங்கி யுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பகுதிக ளில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கட த்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவர்களது உடல் எச்சங்க ளான சில எலும்புகளும் திருகோணமலை பகுதியி லுள்ள கடற்படையின் இர கசிய சித்திரவதை முகாமில் இருந்ததாக ஏற்கனவே கண்டு பிடிக்கப்பட்டது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை நடத்தியதோடு ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸ நாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவர் சந்தேக த்தின் பேரில் கைதாகியிருந்தனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளின் விசாரணைகளில் பல அதிர்சித் தக வல்கள் தெரியவந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தஸநாயக்க நீதிமன்றின் அனுமதியுடன் கடந்த ஜுலை 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.
நீதிமன்றத்தின் உத்தரவுக்கு 6 மாதங்களாக தொடர்ந்தும் இவர்களுக்கான விள க்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டு வந்தது.
இதனை எதிர்த்து கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சந்தேக நபர்கள் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் சந்தேக நபர்களின் மனு மீதான விசாரணை இன்று செவ்வா ய்க்கிழமை கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மனிலால் வைத்தியலங்கார முன்னிலையில் இடம்பெற்றது.
இதன்படி தலா ஒருஇலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் 10 இலட்சம் ரூபா பெறு மதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான், வெளிநாடு செல்வதற்கான இடைக்காலத் தடையுத்தரவையும் பிறப்பித்தார்.
அத்துடன் மாதத்திற்கு ஒருமுறை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து கையெழுத்து இடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
கடத்தப்பட்டு கொழும்பு துறைமுக வளாகத்திலிருந்த ஸ்ரீலங்கா கடற்படை புலனாய்வுப் பிரி வின் சித்திரவதைக் கூடத்திலும் திருகோணமலை கடற்படைத் தளத்திலிரு ந்த கோட்டா முகாமிலும் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைக ளுக்கு உட்படுத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் 11 பேரும் தொடர்ந்தும் உயிருடனேயே இருப்பதாக அவர்களது பெற்றோர்கள் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் உள்ளனர்.