தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்!
மட்டக்களப்பு மாநகர சபைக்கு போட்டியி டும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் அலுவலகம் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மட்ட க்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறை ப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை தேர்தலில் 3ஆம் வட்டா ரத்தில் போட்டியிடும் கந்தசாமி ரகுநாதன் என்பவரின் கொக்குவில்லில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் மீதே நேற்று இரவு 10.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
தாக்குதல் நடாத்தியவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரின் ஆதரவாளர்கள் என தாங்கள் இன ங்கண்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.