விடுதலைப்புலிகளின் இயக்கத்தை காட்டிக்கொடுத்தது உண்மையில்லையாம் - கருணா
தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க த்தை தான் காட்டிக் கொடுத்ததாக கூறுவது உண்மைக்கு புறம்பானதென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி யின் தலைவரும், முன்னாள் பிரதிய மைச்சருமான கருணா என அழைக்க ப்படும் விநாயகமூரத்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு துரோகம் இழைத்தவர்கள் அனைவரும் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் அங்கம் வகிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்காக கட்சி அலுவலகம் திங்கட்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டது.
இதில் கலந்து உரையாற்றிய தமிழர் ஐக்கிய சுத ந்திர முன்னிணியின் தலைவர் விநாயகமூரத்தி முரளிதரன், தான் விடு தலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கிக் கொண்டது உண்மையெனவும் விடு தலைப் புலிகள் இயக்கத்தைக் நான் காட்டிக் கொடுக்கவில்லையெனவும் விவ ரித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பை தான் தான் உருவாக்கியதாக தெரிவித்த அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் வரைக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக இயங்கியதாகவும் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக தான் இருந்தாலும் தேசியக் கட்சியில் தான் ஒருபோதும் தேர்தல் கேட்டு வரவில்லை, என தெரிவித்த விநாயகமூரத்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்திற்கு ஒரு தமிழனை முதலமைச்சராக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்ததுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் திமிரை அடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.