பிரபாகரனது வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை சிதைப்பதா?..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே,ஆரம்பிக்கப்பட்ட கட்சி அல்ல. அது தமிழர்களுக்காக குரல் கொடுப்பதற்காகவும் உரிமையை வென்றெடுப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட கட்சி. இக் கட்சி உருவாகுவதற்கு பின்னணியாக இருந்து செயற்பட்டவர் தலைவர் வே. பிரபாகரன்.
அவரது வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட கட்சியை சிதைப்பதற்காக பேரினவாத மற்றும் சகோதர கட்சிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கல்முனை மாநகர சபைக்கு,வட்டார இல க்கம் 8இல்(சேனைக்குடியிருப்பு) இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கோவிந்தபிள்ளை அன்னம்மாவின் தேர்தல் பிரசார அலுவலக திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்,
தமிழர்களின் உரிமைக்காக சர்வதேசத்தில் மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபை வரை சென்ற ஒரே ஒரு தமிழ்க்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே.ஏனைய கட்சிகளினால் என்றும் தமிழர்களின் பிரச்சினையை ஐ.நா. வரை கொண்டு செல்ல முடியாது.
புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில்,வடகிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான ஆட்சி மறைமுகமாக உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. சமஷ்டியில் தமிழர்களுக்கான நிதி, நீதி, காணி, பொலிஸ், கல்வி, சட்டம், ஒழு ங்கு போன்ற விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கிறன.
வட கிழக்கு இணைவதன் மூலமே ஒரு தனித்துவமான மாகாணத்தை உருவாக்க முடியும்.எமது உரிமைப் போராட்டத்தை வென்றெடுப்பதற்கு தமிழர்கள் ஆணிவேராக இருந்து செயற்பட வேண்டும்.
வேறு நாடுகளின் புலனாய்வு பிரிவின் செயற்பாட்டுடனும் இங்கிருக்கின்ற பேரினவாத கட்சிகளின் அனுசரணையுடனும் அற்ப சொற்ப ஆசைகளுக்காக, தமிழர்களுக்கு உரிமை கிடைக்கக்கூடாதென்று தமிழ்த்தேசியக் கூட்டமை ப்பை உடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு விலகிச் சென்றவர் தான் சூரியன் சின்னத்தில் களமிறங்கியிருக்கும் ஆனந்தசங்கரி.
எமது கட்சி அற்ப சொற்ப ஆசைகளுக்கு ஆசைப்பட்டிருந்தால் நிறைய அமை ச்சுப் பதவிகளை எடுத்திருக்கலாம்.ஆனால் கூட்டமைப்பு தற்காலிகமான ஒரு அபிவிருத்தியை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த காலங்களிலே பல்லாயிரக்கணக்கான மக்களை,போராளிகளை,உடைமைகளை இழந்த எமது தமிழ் மக்களுக்கான ஒரேயொரு தீர்வு உரிமை,அதிகாரம் மாத்திரமே.
தற்காலிகமான ஐந்து வருட அமைச்சுப் பதவியில் எங்களுக்கான உரிமை நிச்சயமாக கிடைக்க முடியாது. இதை அபிவிருத்தி பற்றி பேசும் ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும்.
எங்களுடைய சந்ததியினர், எங்களது பிள்ளைகள் தமி ழர்களின் அடிப்படை உரிமை எனும் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். அதற்காகத்தான் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு நிதானமாகவும் சாதுர்யமாக வும் செயற்படுகின்றது.
தமிழர்கள் ஒவ்வொருவரும் நிதானமாக சிந்திக்க வேண்டும்.ஏனோதானோ என்று வாக்களிக்க செல்லாமல் இயலாதவர்களையும் கூட்டிச் சென்று கல்முனை பிரதேசத்தில் வாக்களிக்கின்ற பொழுதுதான் கல்முனை மாநகர சபை யில் நாங்கள், பதினைந்து ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கல்முனை மாநகர சபையில் பதினைந்து ஆசனங்களை பெற்றுக்கொள்வோமானால் தீர்மானிக்கின்ற சக்தியாக தமிழ்க்கூட்டமைப்பு இருக்க முடியும். அத ற்கான உரத்தையும் அடித்தளத்தையும் இடுகின்றவர்களாக கூட்டமைப்பு வேட்பாளர்களும் தமிழ்த்தேசிய உணர்வாளர்களும் இருக்க வேண்டும்.
தமி ழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு அளிக்கப்படாத ஒவ்வொரு வாக்கும் அது தமிழர்களுக்கு செய்கின்ற துரோக செயலாகவே கருதுகின்றேன்.
ஆகவே எங்களது விடுதலைப் போராட்டத்துக்கு உரம் கொடுக்க வேண்டுமெ ன்றால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கின்ற பொறுப்பும் கடமை யும் தமிழர்களுக்கு இருக்க வேண்டும்.
தமிழர்கள் ஒவ்வொருவரிலும் ஓடுகி ன்ற இரத்தம் வீரத்தமிழரின் வீரத்தாயின் குருதியாக இருக்கின்றது.
வீரத்தாயின் இரத்தமாக இருப்பது தமிழ்த்தேசியத்தின் பால் பற்றுறுதியுள்ள ஒவ்வொருவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தால் தமிழ்த்தேசி யத்தை நிலை நிறுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார்.