Breaking News

அரசிடம் பணம் பெற்றதை நிரூபிக்குமாறு - சி.சிறிதரன்!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இரு ந்து இரண்டு கோடி ரூபாய் பணம் பெற்றதாக கூறிய நாடாளுமன்ற உறு ப்பினர் சிவசக்தி ஆனந்தனால் அத னை ஆதாரத்துடன் நிரூபிக்க முடி யுமா என தமிழ்த் தேசிய கூட்டமை ப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

கிளிநொச்சி வட்டக்கச்சி பொதுச் சந்தையில் நேற்றைய தினம் ஞாயிற்று க்கிழமை நடைபெற்ற தேர்தல் பிர ச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிதரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

வவுனியாவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையா ற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தமிழ்த் தேசிய கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இருந்து இரண்டு கோடி ரூபா க்களை பெற்றதாக குற்றம் சுமத்தியிருந்தார். 

எனவே முடிந்தால் அதனை ஆதாரத்துடன் நிரூபித்துக்காட்டுமாறு நான் அவ ர்களிடம் சவால் விடுகின்றேன் என தெரிவித்துள்ளார். வவுனியாவில் உதயசூ ரியன் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ன ணியின் எந்த வட்டாரத்திலும் வெற்றியடைய மாட்டார்கள் எனக் கூறிய நாடா ளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், எமது தமிழ் மக்களை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் கொலை செய்தமையினையும், கொன்று குவி த்தமையினையும் மக்கள் மறந்து விடமாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்தோடு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை க்கொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக போராட்டத்தை மேற்கொண்டது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்  என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

நாங்கள் இந்த தேர்தலில் இடைக்கால அறிக்கைக்கு ஆணை வழங்குகள் என்று மக்களிடம் கோரவில்லை இது அதற்கான தேர்தலும் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கை க்கு ஆணை கோரி இந்த தேர்தலில் வாக்களியுங்கள் என்று கோரியுள்ளனரா அதனை உறுதிப்படுத்த முடியுமா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.