மஹிந்த ஆட்சியில் 4000 பில்லியன் ரூபா மோசடியின் போது மைத்திரி நித்திரையா?
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக கடுமையாக சாடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னைய ஆட்சியின் போது 4000 பில்லியன் ரூபா மத்திய வங்கி பிணைமுறி மோசடி நடக்கும் போது பிரதான அமைச்சராக இரு ந்தும் ஏன் அமைச்சரவையில் எதி ர்த்து பேசவில்லை?. ஆனால் நல்லா ட்சியில் அனைத்து அமைச்சர்களுக்கு எதிர்த்து பேசுதவதற்கு இடமளித்து ள்ளோமென ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறு ப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அத்துடன் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க எவராலும் முடியவில்லை. வரலாற்றில் நீண்ட காலங்களுக்கு பின்னர் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தமிழில் தேசியகீதம் இசைக்கப்படும் போது எதிர்க்கட்சி தலைவர் இரா. சம்பந்தனின் கண்களில் கண்ணீர் வடிந்தது.
அந்த சந்தோஷத்தை கூட இதுவரை காலம் தமிழ் மக்களுக்கு வழங்க முடிய வில்லையெனச் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு மேற்கு மற்றும் கிழக்கு தொகுதி களுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.