போக்குவரத்து தொழிலாளர்களிற்கு நிலுவை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உடனடியாக நிலுவைத்தொகை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி நடைபெற்ற, போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13வது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பொது மக்கள் பலரும் பாதிக்கப்பட்டனர். நிலையை சமாளிப்பதற்காக அரசு அதிகா ரிகள் முறையான பயிற்சி இல்லாத தற்காலிக ஓட்டுனர்களை வைத்து பேரு ந்துகளை இயக்கி வந்தனர்.
இதன் விளைவாக பல இடங்களில் விபத்து நேர்ந்தது.
இந்நிலையில் இதுகுறி த்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசா ரித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்குவதில் தாமதம் ஏன் என கேள்வி எழுப்பி னார்.
பின்னர், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான நிலுவைத் தொகையை உட னடியாக வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.
முன்னதாக, கொடு க்கும் ஊதியம் போதவில்லை என்றால் வேறு வேலைக்குச் செல்லாமென உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.