Breaking News

4 வயதில் கின்னஸ் சாதனை - ஜனாதிபதி பாராட்டு

நூலொன்றை எழுதி உலகில் இளம் எழுத்தாளராக கின்னஸ் சாதனை படை த்துள்ள சிறுவனான தனுவக்க சேரசிங்க நேற்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி யின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

தனது பெற்றோருடன் சீஷெல்ஸில் வசித்துவரும் இந்த சிறுவன் ''Junk Food'' என்ற ஆங்கில நுலை எழுதும் போது அவருக்கு வயது நான்கு வருட ங்களும் 356 நாட்களும் ஆகும் இந்நூ லை அவர் 3 நாள் காலப்பகுதியில் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

சிறுவனின் திறமையை பாராட்டிய ஜனாதிபதி பரிசொன்றை வழங்கியது டன் எதிர்கால கல்வி நடவடிக்கைக ளுக்காக தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார். சீஷெல்ஸிலுள்ள இலங்கைத் தூதுவர் டிக்கிரி ஹேரத்குணதிலக மற்றும் சிறுவனின் பெற்றோர்களான துஷித்த சேரசிங்க மற்றும் அப்சரா சேர சிங்க ஆகியோரும்  கலந்து சிறப்பித்துள்ளனர்.