யாழ்.மாவட்டத்தில் 4,68476 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையோர் !
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்த 4 இலட்சத்து 68 ஆயிரத்து 476 வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதியுடையவர்கள் என யாழ். மாவட்ட தேர்தல் திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் யாழ்.மாநகர சபை மற்றும் மூன்று நகர சபைகள், 13 பிரதேச சபைகள் உட்பட 17 உள்ளூராட்சி மன்றங்களு க்கான தேர்தலில் 2017 ஆம் ஆண்டுக்கான தேர்வு இடாப்புக்கு அமைய 468476 வாக்காள ர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்.மாநகர சபைக்கு 56182 வாக்காளர்களும், வல்வெட்டித்துறை நகர சபைக்கு 6055 வாக்காளர்களும், பருத்தித்துறை நகர சபைக்கு 7864 வாக்காளர்களும், சாவகச்சேரி நகர சபைக்கு 12490 வாக்காளர்க ளும் தகுதி பெற்றுள்ளனர். மேலும் காரைநகர் பிரதேச சபைக்கு 8170 வாக்காளர்களும், ஊர்காவற்றுறை பிரதேச சபைக்கு 7219 வாக்காளர்களும், நெடுந்தீவு பிரதேச சபைக்கு 3174 வாக்காளர்களும், வேலணைப் பிரதேச சபைக்கு, 12763 வாக்காளர்களும், வலி. மேற்குப் பிரதேச சபைக்கு 34292 வாக்காளர்களும்,
வலி.வடக்கு பிரதேச சபைக்கு 60278 வாக்காளர்களும், வலி.தென்மேற்கு பிரதேச சபைக்கு 37053 வாக்காளர்களும், வலி.தெற்கு பிரதேச சபைக்கு 37086 வாக்காளர்களும், வலி.கிழக்கு பிரதேச சபைக்கு 35047 வாக்காளர்களும், பருத்தித்துறை பிரதேச சபைக்கு 29394 வாக்காளர்களும்,
சாவகச்சேரி பிரதேச சபைக்கு 41 732 வாக்காளர்களும், நல்லூர் பிரதேச சபை க்கு 27100 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதியுடையவர்கள் எனத் தெரிவிக்க ப்பட்டுள்ளது.