தேர்தலுக்காக நாட்டின் தலைவர் நடிப்பதாக - பஷில் ராஜபக்ஷ.!
ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதார கொள்கை தெரியாமலா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அக்கட்சியுடன் கைகோர்த்தார் என்று கேள்வி எழுப்பியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியும் முன்னாள் அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தேர்தலுக்காக நாட்டின் தலைவர் நடிப்பதாக தெரி வித்துள்ளார்.
நாட்டின் தலைவர் எவ்வளவு நடித்தாலும் பொது மக்களுக்கு உண்மை தெரியும் என்றும் பஷில் ராஜபக்ஷ குறிப்பிட்டார். பொருளாதாரத்தை ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து எடுக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமை குறித்து விபரிக்கையிலேயே விபரி த்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில்
ஐக்கிய தேசிய கட்சியிடம் இருந்து பொருளாதாரத்தை கைப்பற்றப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் இங்கு எழுகிகின்ற கேள்வி என்னவெனில் ஐக்கிய தேசிய கட்சியின் பொருளாதாரக் கொள்கை தெரியாமலா அக்கட்சியுடன் இணைந்தார் என்பதாகும்.
ஜனாதிபதி பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்து விட்டன. ஆனால் இதுவரை பொருளாதாரத்தை கட்டியெழுப்பவில்லை. பொருளாதாரம் மேலும் நெருக்கடிக்குள்ளாகி வருகின்றது. இந்நிலையில் தற்போது பொருளாதார த்தை கைப்பற்றப்போவதாக நாட்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் எஞ்சியிருக்கின்ற இரண்டு வருடங்களுக்குள் பொருளாதாரத்தை ஒன்றும் செய்ய முடியாது. இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தும் எதனையும் செய்யவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதாக கூறியது. ஆனால் அதனையும் செய்யவில்லை.
எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை.
தற்போது நாட்டின் தலை வர் நடித்துக்கொண்டிருக்கின்றார். ஆனால் அந்த நடிப்பு இம்முறை மக்களிடம் எடுபடாது. நாட்டில் என்ன நடக்கின்றது என்பதனை மக்கள் புரிந்து கொண்டு ள்ளதாக தெரிவித்தார்.