Breaking News

விசாரணை ஆணையத்தில் ஆஜராக மாட்டார் சசி - வழக்கறிஞர் தகவல்.!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுக சாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெங்களூர் பரப்பன அக்ராஹாரா சிறையில் இருக்கும் சசிகலா, அப்போ லோ மருத்துவமனை தலைவர் பிர தாப் சி.ரெட்டி, அவரது மகள் பிரீத்தா ரெட்டி, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவ மனை டாக்டர்கள், டிடிவி தினகரன், இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா, ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் ஆகியோருக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, தன்னிடம் உள்ள ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்யும்படி, விசாரணை ஆணையம் கடந்த 22-ம் தேதி சம்மன் அனுப்பியது. 

தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்த சம்மனை சிறைத்துறை பொலீஸ் சூப்பி ரண்டு முன்னிலையில் சசிகலா கையெழுத்து போட்டு பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து தனது வழக்கறிஞர் மூலம் தன்னிடம் உள்ள மருத்துவ ஆவணங்களை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா ஆஜராக மாட்டார் என்றும் சசிகலாவுக்கு பதிலாக அவரது சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் விளக்கம ளிக்க உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.