Breaking News

யாழில் குழந்தையை குத்திக் கொன்ற கொடூரம்; இருவர் வைத்தியசாலையில்!

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணைப் பகுதியில் மூன்று வயதான குழந்தை ஒன்று கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டுள்ளதோடு வயதான பெண் ஒருவரும் குத்துக்காயங்களுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதி க்கப்பட்டுள்ளதுடன் நபர் ஒருவரும் தற்கொலைக்கு முயன்று வைத்தியசா லையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இச் சம்பவம் குறித்து விரிவாகத் தெரிய வருகையில், 

யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணை பத்திரகாளி கோவிலுக்கு அண்மை யில் வசிக்கும் ஈஸ்வரன் எனும் நபர் தனது தாயினையும் தமையனின் குழ ந்தையையும் கத்தியால் குத்திய தோடு தானும் தற்கொலை செய்யும் நோக்கில் விஷம் அருந்தியுள்ளார்.

இந்த நிலையில் கத்திக் குத்துக்கு இலக்கான குழந்தை உயிரிழந்ததுடன் வய தான பெண்மணி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கத்திக்குத்தினை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் குறித்த நபர் விசம் அருந்திய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனும திக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் குறித்த விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.