பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அசம்பாவித்தை வன்மையாக கண்டிப்பதாக - வே.இராதாகிருஸ்ணன்
மக்களால் தெரிவு செய்யபட்டு பாரா ளுமன்றுக்கு அனுப்பப்பட்ட பாராளு மன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற த்தில் நடந்து கொண்ட விதத்தையும் அங்கு நடைபெற்ற அசம்பாவிதத்தை யும் நான் வன்மையாக கண்டிக்கி ன்றேன். மக்களால் தெரிவு செய்யப்ப ட்டவர்கள் மக்கள் நலன் கருதி செய ற்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவி த்தார்.
கேகாலை மாவட்டம் யட்டியன்தோ ட்டை பிரதேச சபைக்கு ஐ.தே.கட்சி யில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாகயட்டி யன்தோ ட்டை பனாவத்த தோட்டம் போன்றவற்றில் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடை பெற்றது.
இந்த கூட்டங்களில் மலையக மக்கள் முன்னணியின் தலை வரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் கல்வி இராஜாங்க அமை ச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டு உரையாற்றுகை யில் இவ்வாறு தெரிவித்தார்.