Breaking News

5 வருட ஆட்சியில் 99 வருட குத்தகை வணிகம்; பதவிக்கு பொருத்தமில்லையாம் - தேரர்

ஐந்து வருடத்திற்கு ஆட்சிக்கு வந்து விட்டு 99 வருடங்களிற்கு நாட்டு சொத்துக்களை வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு விற்பனை செய்யும் ஆட்சியாளர்கள் ஆட்சிபீடத்தில் இரு ப்பதற்கே தகுதியற்றவர்கள் என்று ஸ்ரீரோஹண சங்க சபையின் செயலா ளர் ஒமாரே கஸ்ஸப்ப தேரர் தெரி வித்துள்ளார். 

புதிய அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு உரிய இடம், தேசிய சொத்துக்க ளின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களையும் கருத்திற் கொண்டு யாருக்கு வாக்களிக்க வேண்டுமென தீர்மானத்தை மக்கள் அவதானித்தும், ஆராய்ந்தும் மேற்கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார். 

காலி – கம்புருப்பிட்டியவில் உள்ள கப்புகொட புராதன விகாரை வளாகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஒமாரே கஸ்ஸப்ப தேரர் மேலும் தெரிவித்தார். 

“5 வருடங்களுக்கு ஆட்சியை ஏற்றுக்கொண்ட நபர் அந்த வருடங்களிற்குள் எப்படி நாட்டை ஆட்சிசெய்வது பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். 5 வருட ங்களுக்கு ஆட்சிக்குவந்துவிட்டு எவ்வாறு அவர்கள் 99 வருட குத்தகைக்கு நில ங்களை விற்பனை செய்வது? 

இந்த நாட்டின் தேசிய ஐக்கியத்திற்கு பங்கம் ஏற்படுகின்ற தீர்மானங்களை எடுப்பது முட்டாள்தனமாகும். இந்த நாட்டை வெளிநாடுகளுக்கு குத்தகைக்கு வழங்க முடியாது. அவற்றை யாராகிலும் செய்வாராகில் இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். 

தேசிய பாதுகாப்பிற்கும், ஐக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் புதிய அரசி யலமைப்பில் வெளிநாட்டு முகவர்களுக்கு தேவையான வகையில் திருத்த ங்களை கொண்டு வருவர்களும், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மான ங்களை கொண்டு வருபவர்களுமே தாய்நாட்டிற்கு பங்கம் ஏற்படுத்துபவர்க ளாவர். 

இந்த நாட்டின் பொதுச் சொத்துக்களை பாதுகாக்கின்ற, வெளிநாடுகளுக்கு இந்நாட்டுச் சொத்துக்களை விற்பனை செய்யாத ஒரு திட்டம் யாரிடமாவது இருந்தால் அவர்களுக்கு ஆதரவளிப்பதே சங்க சபையின் தீர்மானமாகும்.

அண்மையில் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் மாநாடு ஒன்றை நடத்தி நாட்டுச் சொத்துக்களை விற்பனை செய்வதில்லையென மார்பில் கை வைத்த படி வாக்குறுதியளித்தது சிறந்தது தான். 

ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை. எனவே அப்படிப்பட்டவர்கள் ஆட்சியிலிருக்கக்கூடாது. எனவே மக்கள் சிந்தித்து நாட்டு சொத்துக்கள பாது காப்பதாக உறுதியளிக்கும் பிரிவினருக்கு ஆதரவளிப்பது குறித்து பொறுமை யான தீர்மானம் எடுக்க வேண்டும். 

புத்த சாசனம் பாதுகாக்கப்பட வேண்டும், மதமற்ற நாட்டில் மக்கள் வாழ்க்கை யை கட்டியெழுப்ப முடியாது. பௌத்த மதத்திற்கான இடத்தை அரசியலமை ப்பிலிருந்து இல்லாதொழிப்பதற்கு எவராகிலும் முயற்சி செய்தால் அதற்கெ திராக மக்கள் கிளர்ந்தெழும்பவும் வேண்டும். இவற்றை அவதானித்தே  மக்கள் வாக்களிக்க வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.