மடு தேவாலயத்திற்கு அருகில் பௌத்த விகாரை அமைப்பதற்கு முயற்சி - இராணுவம்
மன்னார் மடு தேவாலய நுழைவாயில் அருகாமையில் இராணுவத்தினரால் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கும் எடு க்கும் முயற்சியை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூறி மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டு வடமாகாண கல்வி மற்றும் கலாசார அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைத்துள்ளன.
இந்த இடத்தில் சிற்றுண்டிச்சாலை ஒன்றை நடத்திவரும் இராணுவத்தி னர் குறித்த இடத்திலுள்ள மரத்திற்கு கீழ் புத்தர் சிலை ஒன்றை வைத்து பௌத்த விகாரை ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறும் மன்னார் பிரஜை கள் சங்கங்கள் இந்த இடத்தில் இவ்வாறான செயலை செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
அது மடு தேவாலயத்திற்கு செய்யும் மிகப் பெரிய அவமரியாதை எனவும் குறி ப்பிட்டுள்ளன.
இப்போதைக்கும் இவ்விடத்தை வணக்க வழிபாடுகள் நடத்தும் இடமாக இராணுவத்தினர் மாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பிரஜைகள் சங்கங்கள் பிரபல கிறிஸ்தவ தேவாலயம் உள்ள இடத்தில் இவ்வாறான செயலை அனுமதிக்க முடியாதென குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளன.
வடக்கில் பல இடங்களில் புத்தர் சிலைகளை வைத்து வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்ற இராணுவத்தினர், அவ்விடத்தை விட்டுச் செல்லும் போது, சிலைகளை அகற்றாமல் செல்வதன் மூலம் ஏற்படுகின்ற பிரச்சினை, தேசிய ரீதியான பிரச்சினையாக உருவெடுப்பதால் இந்த இடத்தில் புத்தர் சிலையை வைப்பதற்கு முன்னரே இச்செயற்பாட்டை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மன்னார் பிரஜைகள் சங்கங்கள் இரண்டும் வடமாகாண சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.