6 மாதங்கள் சிறையிலிருந்து நாடு திரும்பிய இலங்கைப் பெண் : நடந்தது என்ன?
சவூதி அரேபியாவில் ஆறு மாதங்களாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு வாகரையை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 31 ஆம் திகதி அன்று வீடு வந்து திரும்பியுள்ளார்.
வாகரை கண்டலடியை சேர்ந்த மாரிமுத்து மகேந்திராதேவி கொழும்பிலு ள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையமொன்றின் ஊடாக கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்னர் சவூதி அரேபியா சென்றிருந்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இரண்டு பிள்ளைகளின் தாயாரான இவர் தனது குடும்ப வறுமை நிலை காரணமாக 4.6.2013 இல் சவூதி அரேபியா சென்றிருந்தார்.
சவூதி அரேபியா சென்ற நான் அங்கு 6 மாதங்களாக ஒரு வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்த நேர த்தில் அந்த வீட்டார் எனது கடவுச்சீட்டுடன் சவூதிஅரேபியா றியாத்திலுள்ள முகவர் நிலையத்தில் என்னை ஒப்படைத்தனர்.
பின்னர் அந்த முகவர் நிலையத்திலிருந்து வெளியேறி பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிட்டேன்.
பொலிஸார் வேறொரு வீட்டுக்கு என்னை வேலைக்கு அனுப்பி அங்கு வேலை செய்த பின்னர் 17.7.2016 அன்று அந்த வீட்டை விட்டு வெளியேறி றியாத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்திற்கு சென்ற போது அந்த தூதுவராலயத்திலுள்ள அதிகாரிகளுக்கு என்னை சமைப்பதற்காக பயன்படுத்தினர்.
பின்னர் இலங்கைக்கு எப்படியாவது வர வேண்டும் என நான் மன்றாடிய போது சவூதி அரேபியாவிலுள்ள வெளிநாட்டவர்களை நாட்டுக்கு அனுப்பும் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டேன். பின்னர் அங்கு ஆறு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர் கடந்த 31.12.2017 அன்று எனது சொந்த வீட்டுக்கு வந்து சேர்ந் துள்ளேன்.
அந்த தூதுவராலயத்திலுள்ள அதிகாரிகளுக்கு நான் ஒரு வருடம் சமையல் வேலை செய்துள்ளேன்.
ஆனால் ஒரு ரூபா கூட சம்பளம் எனக்கு தரவில்லை. எனது கணவர் கூலித் தொழில் செய்பவர் எனது பிள்ளையை படிப்பிப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டு பாடசாலை அதிபரின் உதவியுடன் மீண்டும் பாடசாலையுடன் இணைத்து ள்ளேன்.
எனது நிலை தொடர்பில் இலங்கையிலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளேன் எனத் தெரிவித்து ள்ளார்.