Breaking News

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தேர்ந்தெடுங்கள்!

பாராளுமன்றத்தை கலைத்து புதிய பிரதமரை தெரிவு செய்யுங்கள். இனியும் ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றித்து தேசிய அரசாங்கத்தில் பயணிப்பது, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு அவமானமாகும். 

எனவே ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்  கூட்டு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. பொரெல்லை - ஸ்ரீ வஜிரா ஸ்ரராம விகாரையில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.