அதிபர் பவானிக்கு ஆதரவாக ஹட்டனில் ஆர்ப்பாட்டம்!
பதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபர் பவானி ரகுநாதன், முழந்தாளி ட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்திற்கு எதிராகவும், அதற்கு காரணமான ஊவா மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளை உடனடியாக பதவி நீக்கி சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வலியுறுத்தியும் இன்று ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றுள்ளது.
ஹட்டன் மல்லியப்பு சுற்று வட்டத்தி ற்கு முன்பாக மதியம் 12.30 மணியள வில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் போது மலைநாட்டு புதிய கிராம மக்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகா ம்பரம், நுவரெலியா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், உதயகுமார், ஆர்.இரா ஜாராம், சரஸ்வதி சிவகுரு என பலரும் பொது மக்களுடன் கலந்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர்களுடன் இணைந்து ஆர்ப்பாட்ட காரர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பதாதைகளை ஏந்தி, எதிர்ப்பு கோஷ ங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.
இதேவேளை ஹட்டன் பொலிஸாரால் வீதியை மறித்து போராட்டத்தை நட த்துவதற்கும், ஊர்வலம் செய்வதற்கும் எதிர்த்து ஹட்டன் நீதிமன்றத்தின் ஊடாக நீதிமன்ற தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.