முஸ்லிம் கட்சிகளுக்கு அறை கூவல் - பைஸர் முஸ்தபா !
போலி அரசியல் கலாசாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, சமூக நோக்காகக் கொண்ட உண்மையான அரசியல் செய்ய முன்வருமாறு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, முஸ்லிம் கட்சிகளுக்கு அறைகூவல் விடுத் தார்.
அம்பாறை மாவட்டத்தில் பொத்து வில் மற்றும் நிந்தவூர் ஆகிய பிரதேசங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிக்கும் முகமாக இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்க ளில் மேலும் தெரிவிக்கையில்..... எனக்கு முஸ்லிம் சமூகம் தேவை. எனவே தான் நான் சமூக நோக்காகக் கொண்ட அரசியலை செய்து வருகின்றேன்.
கிராண்ட்பாஸ், அழுத்கம மற்றும் கிந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெற்ற சம்பவங்களின்போது, நான் என்னையே அர்ப்பணம் செய்து, தனிமையாக போராடினேன்.
இச்சந்தர்ப்பத்தில் கூட, தாமே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் எனக்கூறிக் கொள்ளும் எந்த முஸ்லிம் தலைமைத்துவ கட்சிகளும் முன்வரவில்லை.
இக்கட்சிகள் இறுதி கட்டத்திலேயே இப்பகுதிகளுக்கு வந்தது மட்டுமல்லாமல், புகைப்படம் எடுத்துக்கொண்டு, பத்திரிகைகளிலும் பேஷ் புக்களிலும் தம்மை விளம்பரப்படுத்தி கொண்டார்கள்.
முஸ்லிம் கட்சிகள் சமூகத்துக்கு செய்த வேலை. இவ்வாறான செயல்களை த்தான் நான் வெறுக்கிறேன்.
யாரும் இம்முறை ஏமாற வேண்டாம். சோர்ந்து போகவும் வேண்டாம். ஏமாற்று கலாசாரத்தை மாற்றுங்கள்.
உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் தேசிய அரசாங்கத்துக்கு ஆத ரவை வழங்குங்கள் அதனூடாக வேட்பாளராகக் களமிறங்கியுள்ளவர்களை ஆதரியுங்கள் எனத் தெரிவித்துள்ளார்.