Breaking News

உண்­மையை நாளை வெளிப்­ப­டுத்­துவதாக - ரவி கருணாநயக்க.!

பிணை­முறி குறித்த ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. அதன் உண்­மைத்­தன்­மையை நாளை வெளிப்­ப­டுத்­து வேன் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ரவி கரு­ணா­நா­யக்க தெரி­வித்தார். கொழும்பு கொச்­சிக்­கடை பிர­தே­ச த்தில் நேற்று முன்­தினம் மாலை இட ம்­பெற்ற மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­ல்.......

நல்­லாட்சி அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்­கு­வ­ரும்­போது வீழ்ச்­சி­யுற்­றி­ருந்த பொரு­ளா­தா­ரமே நாட்டில் இருந்­தது. இந்த பொரு­ளா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப நாங்கள் மிகவும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்டு வரு­கின்றோம். அதற்­கா­கவே தேசிய அர­சாங்கம் ஒன்­றுக்கு நாங்கள் சென்றோம். 

இன்று நாட்டின் பொரு­ளா­தாரம் வீழ்ச்­சி­ய­டைந்து செல்­வ­தாக ஐக்­கிய தேசிய கட்­சியை விமர்­சிப்­பது எங்­க­ளுடன் இருப்­ப­வர்­க­ளாகும். அர­சாங்­கத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் இருக்கும் தயா­சிறி ஜய­சே­கர, டிலான் பெரேரா, ஜோன் சென­வி­ரத்ன, சுசில் பிரே­ம­ஜ­யந்த, மஹிந்த அம­ர­வீர போன்­ற­வர்கள் மஹிந்த ராஜ­பக் ஷ­வு­டனே இருந்­தார்கள். 

அன்று நாட்டின் பொரு­ளா­தாரம் அடி­மட்­டத்தில் இருக்­கும்­போது இவர்கள் வாய்­தி­றக்­க­வில்லை. ஆனால் இன்று அர­சாங்­கத்தில் இருந்­து­கொண்டு ஐக்­கிய தேசிய கட்­சியை விமர்­சித்து வரு­கின்­றனர். அர­சாங்­கத்­துக்­காக அர்ப்­ப­ணித்த எங்­களின் நற்­பெ­ய­ருக்கு களங்கம் ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­மையே எமக்கு வேத­னை­யாக உள்ளது.

அத்­துடன் கடந்த அர­சாங்க காலத்தில் பல மில்­லியன் ரூபாக்­களை மோச­டி­ செய்­த­தாக மஹிந்­தா­னந்த அளுத்­க­ம­கே­வுக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்கள் அனைத்தும் முடி­வுற்­ற­தாக இலஞ்ச ஊழல் ஆணைக்­குழு உறு­திப்­பத்­திரம் அளிக்­கின்­றது. 

இது நல்­லாட்­சியின் அடை­யா­ள­மாக இருக்க முடி­யாது. அதே­போன்று மத்­திய வங்கி பிணை­முறி தொடர்­பான விசா­ரணையை மேற்­கொண்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை வெளி­வந்­துள்­ளது. அதில் சொல்­லப்­பட்ட விட­யங்கள் திரி­பு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. 

எனவே மத்­திய வங்கி பிணை­முறி மோசடி தொடர்பில் ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையில் உள்­ள­டக்­கப்­பட்ட விட­யங்­களை மக்கள் அறிந்­து­கொள்­ள­ வேண்டும். அறிக்­கையில் தெரிவிக்கப்பட்டதாக பல விடயங்கள் அறிக்கை யில் இருப்பதாக தெரிவித்து எங்களுக்கு சேறுபூசி வருகின்றனர். 

அதனால் ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாளைய தினம் விசேட உரையொன்றை மேற்கொண்டு அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்க ளுக்கு தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.