தமிழ்த்தேசிய கூட்டமைப்பை புலிகளின் தலைவரே உருவாக்கியதாக - கோடீஸ்வரன்!
புதிய அரசியலமைப்பின் ஊடாக தமி ழர்களின் உரிமையை வென்றெடுப்ப தற்காகவும் வடக்கு கிழக்கு இணை ந்த சமஸ்டி முறையிலான தீர்வை காணவே தமிழ் தேசிய கூட்டமைப்பு முனைவதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் விவரித்துள்ளார். தமி ழ்த்தேசிய கூட்டமைப்பு அபிவிரு த்தியை மாத்திரம் நோக்காகக்கொ ண்டு செயற்பட்டிருந்தால் இன்று மத்திய அரசாங்த்தில் எத்தனையோ அமை ச்சுப்பொறுப்புக்களை பெற்றிருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். அம்பாறை - கல்முனை பாண்டிருப்பு கிராமத்தில் 10ஆம் வட்டாரத்தில் போட்டி யிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் பொ.செல்வநாயகம் இல்ல த்தில் அவரது தலைமையில் தேர்தலுக்கான கட்சிக்காரியாலய திறப்பு விழா நேற்று புதன்கிழமை மாலை நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து உரையாற்றிய அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறு ப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பினை உடைப்ப தற்காக உள் நாட்டிலும், சர்வதேசத்தில் இருந்து செயற்படும் சில அமைப்புக்க ளும் முனைப்புடன் செயற்படுவதாக தெரிவித்தார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முகவரியை பெற்ற சிலர் தங்களது சுய நல னுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், தமிழ் மக்களின் இருப்பை பாது காக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது தமிழ் மக்கள் இருப்பதாக வலியுறு த்தினார்.
நிரந்தரமான வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி முறை ஆட்சி மூலம் தமது உரிமையை வென்றெடுக்க வேண்டும் அப்போதுதான் நிரந்தரமான நிறைபே றான அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பி னர் கோடீஸ்வரன் வலியுறுத்தினார்.