"தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரம்" பெப்ரல்
தேர்தல் அறிவிக்கப்பட்டு 30 நாட்கள் நிறைவடையும் நிலையில் இதுவரை யில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான 243 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
மேலும் 287 தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. எனவே கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதாக சுயாதீன தேர்தலு க்கான பெப்ரல் அமைப்பு தெரிவித்து ள்ளது. அவற்றுள் 28 முறைப்பாடுகளே பாரதூரமானதாக அமைந்துள்ளன. இதேபோன்று 37 முறைப்பாடு கள் சட்டவிரோத செயற்பாடுகளாகவும் 4 முறைப்பாடுகள் வைத்தியசாலையு டன் தொடர்புடையதாகவும் அமைந்துள்ளன என்று பெப்ரல் அமைப்பின் நிறை வேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார். கொழும்பு சன சமூக கேந்திர நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தொடர்ந்து உரையாற்றுகையில், இர ண்டரை வருடங்களுக்கு பின்னர் பல காரணங்களுக்காக பிற்போடப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இம்முறை இடம்பெறவுள்ளது.

உள்ளூராட்சிமன்ற தேர்தல் நாடு பூராகவும் ஒரே நேரத்தில் இடம்பெறவுள்ளமை விஷேட அம்சமாகும். இவ்விடயத்தில் தேர்தல் ஆணைக்குழு மிக அவதானத்துடன் செயற்படுகின்றது. சுதந்திரமான தேர்தல் இடம்பெறுவதற்கு தட ங்கல்கள் ஏற்படலாம். இதனை தவிர்ப்பதற்காக தேர்தல் அவதானிப்பு பணிகளை பெப்ரல் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.
அதேபோன்று தேர்தலுக்கு முந்திய காலம் தொடக்கம் முடிவடையும் வரை தனது அவதானிப்பு பணிகளை மேற்கொள்ள தயாராகவுள்ளது. இம்முறை தேர்தலை முன்னிட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் 7000 பேரை சேவையில் ஈடுபடுத்தவுள்ளனர்.
342 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் விசேடமாக தேர்தலுக்கு முந்திய காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் போன்ற அனுபவம் வாய்ந்த அவதானிப்பாளர்களினூடாக 160 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான விசேட பயிற்சி பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இம்முறை தேர்தல் காலங்களில் வேட்பாளர்கள் அரச ஊழியர்களை தமது அரசியல் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இது தொடர்பாக நடவடிக்கைள் எடுக்கப்படும்.
தேர்தல் நடவடிக்கைகளுக்காக அரச சொத்துக்களை பயன்படுத்துதலுடன் தொடர்புடைய முறைப்பாடுகள் 29 கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 23 முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சட்டவிரேதமான பிரசாரம் மற்றும் அரசியல் பிரயோகம் போன்றனவே பிரதான முறைப்பாடுகளாக உள்ளன. அதேபோன்று இவ்வாறான தேர்தல் சட்ட விரோத செயற்பாடுகளை குறைப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் கட்டவுட் வைத்தல் , போஸ்டர்கள் ஒட்டுதல் போன்ற பிரசார செயற்பாடுகளை மட்டுப்படுத்தக்கூடிய தன்மையினை இம்முறை தேர்தலில் காணக்கூடியதாகவுள்ளது.
தேர்தல் காலங்களில் மக்களுக்கு பொருட்களை இலவசமாக வழங்கும் நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன.
அவ்வாறு வழங்கப்படும் பொருட்களை அரச அதிகாரிகளே பெற்றுத்தர வேண்டுமென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்கப்ப டும் பொருட்கள் அரசியல்வாதிகளின் பெயரில் விநியோகிப்பது சட்டவிரோத செயற்பாடுகளாகுமெனத் தெரிவித்தார்.