Breaking News

பிரதான கட்சிகளின் வேட்பாளர்களை கொழும்புக்கு அவசர அவசரமாக அழைப்பு !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜப  க்சவுக்கு ஆதரவான ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியின் சார்பில் உள்ளூ ராட்சி சபைகளில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் கொழும்புக்கு அவசர மாக அழைக்கப்பட்டுள்ளனர். 

எதிர்வரும் உள்ளூராட்சி சபைகளு க்கான தேர்தலில் மேற்கொள்ளக்கூ டிய வெற்றி வியூகத் திட்டங்களை வகுப்பதற்காக இவ் அழைப்பு விடுக்கப்ப ட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்து ள்ளார். 

இவர்களுக்கான மாநாடு ஒன்றும் கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்களும் நாளைய தினம் கொழும்புக்கு அழை க்கப்பட்டுள்ளனர். 

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகையில் இவர்களுக்கான மாநாடு கட்சியின் தலைவரும், பிரதம ருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது. 

இந்த நிலையில் ஜே.வி.பியின் கீழ் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுக்கான மாநாடு ஒன்றும் வெகுவிரைவில் கொழும்பில் நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.